அஜித் படத்தின் இசையமைப்பாளருக்கு தேசிய விருது… வாழ்த்து தெரிவித்த ரஜினி – விஜய்!

2019-ஆம் ஆண்டிற்கான 67-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மார்ச் 22-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கு ‘அசுரன்’ படத்தில் நடித்ததற்காக என அறிவிக்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான விருது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்ததற்காக என அறிவிக்கப்பட்டது.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது டி.இமானுக்கு ‘விஸ்வாசம்’ படத்தின் பாடல்களுக்கு இசையமைத்ததற்காக என அறிவிக்கப்பட்டது. ஸ்பெஷல் ஜூரி விருது பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்துக்கு என அறிவிக்கப்பட்டது. சிறந்த படத்துக்கான விருது வெற்றிமாறன் – தனுஷ் காம்போவில் வெளியான ‘அசுரன்’ படத்துக்கு என அறிவிக்கப்பட்டது.

சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது நாகவிஷாலுக்கு ‘KD’ படத்தில் நடித்ததற்காக என அறிவிக்கப்பட்டது. தற்போது. பிரபல இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் “எனக்கு தேசிய விருது கிடைத்ததற்காக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘தளபதி’ விஜய், ‘தல’ அஜித் ஆகியோர் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர்” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Share.