‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் மோதப்போகும் அருண் விஜய்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் அருண் விஜய். இப்போது, அருண் விஜய் நடிப்பில் ‘சினம், வா டீல், அக்னிச் சிறகுகள், யானை, பார்டர்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வா டீல்’ படத்தின் ரிலீஸுக்காக பல ஆண்டுகளாக அருண் விஜய்யின் ரசிகர்கள் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

தற்போது, நடிகர் அருண் விஜய்யே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். இப்படத்தை வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இதனால் அருண் விஜய்யின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ரத்தின சிவா இயக்கியிருக்கிறார். இதில் அருண் விஜய்-க்கு ஜோடியாக ‘கோ’ படம் மூலம் ஃபேமஸான நடிகை கார்த்திகா நாயர் நடித்திருக்கிறாராம். ‘வா டீல்’ படத்துடன் அதே நாளில் ரஜினியின் ‘அண்ணாத்த’ மற்றும் சிலம்பரசனின் ‘மாநாடு’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share.