பேரன்களுடன் ‘அண்ணாத்த’ படத்தை பார்த்த ரஜினி… வைரலாகும் ஆடியோ பதிவு!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் கடந்த ஆண்டு (2020) தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி எந்த இயக்குநருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பின், இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் தான் ரஜினி நடிக்கப்போகிறார் என்று உறுதிசெய்யப்பட்டது. இந்த படத்தை தயாரிப்பது ‘சன் பிக்சர்ஸ்’ என்பதால், படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரஜினியின் ‘முத்து’ பட வசனம் போல் எப்போ வரும்னு சொல்லாம, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்தது.

மேலும், படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடித்துள்ளதாம். ரஜினிக்கு எதிராக மோதும் வில்லன் ரோல்களில் ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், அபிமன்யு சிங் நடித்துள்ளனராம். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர், 4 பாடல்கள் மற்றும் நேற்று வெளியான ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிறவைத்தது.

கடந்த வாரம் படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்தனர். படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தை நேற்று தனது பேரன்களுடன் பார்த்து ரசித்த ரஜினி ‘ஹூட்’ ஆப்பில் இது குறித்து பேசி பதிவிட்டுள்ளார்.

Share.