மாமனிதன் படத்தை பார்த்த ரஜினிகாந்த் ! என்ன சொன்னார் தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மாமனிதன்.
இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து உள்ளார் .இந்த படத்தை தயாரிப்பாளர் R.K .சுரேஷ் வெளியிடுகிறார் .இந்த படத்தில் நடிகை காயத்திரி மற்றும் குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர் .

இந்த படத்தில் முதல் முறையாக இயக்குனர் இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர் . இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது . இந்நிலையில் ரஜினிகாந்த் பிரத்தியேக காட்சி மூலம் மாமனிதன் படத்தை பார்த்துள்ளார் . இயக்குனர் சீனு ராமசாமி அதை பற்றி சமீபத்தில் மாமனிதன் இசை வெளியீட்டு விழாவில் பேசி உள்ளார்.

நள்ளிரவு 3 மணி அளவில் எனக்கு ஒரு போன் வந்தது. மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனம் நிறைந்து பாராட்டினார். விஜய் சேதுபதி,காயத்ரி நடிப்பு என ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு சொல்லி பாராட்டினார். நான் ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னேன் ரொம்ப தெம்பா இருக்கு சார், நன்றி என்றேன் என்று பகிர்ந்து உள்ளார் சீனு ராமசாமி.

Share.