டான் படத்தை பார்த்த ரஜினிகாந்த் !

தமிழ் சினிமாவில் நாற்பது படங்களுக்கு மேலாக முன்னணியில் இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த . இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.இமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படம் பெரியதாக வெற்றி பெறவில்லை .

பொதுவாக ரஜினிகாந்த் தமிழில் ஏதாவது படம் பார்த்துவிட்டு அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தால் உடனே அந்த படக்குழுவிற்கு தனது பாராட்டை தெரிவிப்பார் . சமீபத்தில் ஓடிடியில் வெளியான டாணாக்காரன், ‘கே.ஜி.எஃப் 2’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை தொலைபேசியில் பாராட்டி இருந்தார் .அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் டான் . இந்த படத்தை இயக்கி இருந்தவர் இயக்கி இருந்தவர் சிபி சக்கரவர்த்தி . அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் .

டான் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் ” சூப்பர் பா … கடைசி 30 நிமிடம் என்னுடைய கண்ணீரை தடுக்க முடியல ” என்று படக்குழுவிடம் அலைபேசியில் அழைத்து பேசியுள்ளார் .மேலும் இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் .

நடிகர் ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் நடித்து இருக்கிறார் . விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது .

Share.