ரஜினி ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘அண்ணாத்த’ படத்தின் ‘சாரல் காற்றே’ பாடல்!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் கடந்த ஆண்டு (2020) தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி எந்த இயக்குநருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பின், இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் தான் ரஜினி நடிக்கப்போகிறார் என்று உறுதிசெய்யப்பட்டது. இந்த படத்தை தயாரிப்பது ‘சன் பிக்சர்ஸ்’ என்பதால், படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரஜினியின் ‘முத்து’ பட வசனம் போல் எப்போ வரும்னு சொல்லாம, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்தது.

படத்தின் டைட்டிலே ‘அண்ணாத்த’ என்று திடீரென அறிவித்து விட்டார்கள். மேலும், படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடிக்கிறது. சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் சிங்கிள் டிராக் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் சிங்கிள் டிராக் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

படத்தை வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று படத்தின் ‘சாரல் காற்றே’ பாடலை ரிலீஸ் செய்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்பாடலை சித்ஸ்ரீராம், ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

Share.