‘தலைவர் 169’-ஐ தயாரிக்கும் ‘சன் பிக்சர்ஸ்’… ரஜினியுடன் கூட்டணி அமைக்கப்போகும் விஜய் பட இயக்குநர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இந்த ஆண்டு (2021) அக்டோபர் 25-ஆம் தேதி டெல்லியில் நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் கடந்த ஆண்டு (2020) தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடித்திருந்தது.

ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அல்லது பால்கி இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், ரஜினிக்கு பிரபல இயக்குநர் நெல்சன் ஒரு சூப்பரான கதை சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்து விட்டதாம். இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நெல்சன் இப்போது விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Share.