ரஜினி – கே.எஸ்.ரவிக்குமார் காம்போவில் சூப்பர் ஹிட்டான ‘படையப்பா’… இதுவரை யாரும் பார்த்திராத ஸ்டில்ஸ்!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் கடந்த ஆண்டு (2020) தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி எந்த இயக்குநருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பின், இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் தான் ரஜினி நடிக்கப்போகிறார் என்று உறுதிசெய்யப்பட்டது. இந்த படத்தை தயாரிப்பது ‘சன் பிக்சர்ஸ்’ என்பதால், படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரஜினியின் ‘முத்து’ பட வசனம் போல் எப்போ வரும்னு சொல்லாம, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்தது.

படத்தின் டைட்டிலே ‘அண்ணாத்த’ என்று திடீரென அறிவித்து விட்டார்கள். மேலும், படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடிக்கிறது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில், இப்படத்தை இந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனமே ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கடந்த மே 12-ஆம் தேதி ஹைதராபாத் ஷெடியூலில் ரஜினி சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டதால், அவர் சென்னைக்கு திரும்பி விட்டார்.

ரஜினியின் கேரியரில் மிகப் பெரிய வெற்றியடைந்த படம் ‘படையப்பா’. தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமார் இதனை இயக்க, ஹீரோயினாக சவுந்தர்யா நடித்திருந்தார். இதில் ஹீரோயின் கேரக்டரை காட்டிலும் வில்லி கேரக்டருக்கு தான் ஸ்கோப் அதிகம். அந்த வில்லி ரோலில் அசால்ட்டாக நடித்து அப்ளாஸ் வாங்கினார் நடிகை ரம்யா கிருஷ்ணன். இதுவரை யாரும் பார்த்திராத ‘படையப்பா’ படத்தின் அரிய புகைப்பட தொகுப்பு இதோ..

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

Share.