இரவின் நிழல் படத்தை பார்த்த ரஜினிகாந்த் !

தமிழ் சினிமாவில் நாற்பது வருடங்களுக்கு மேலாக முன்னணியில் இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த . இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படம் பெரியதாக வெற்றி பெறவில்லை .

பொதுவாக ரஜினிகாந்த் தமிழில் ஏதாவது படம் பார்த்துவிட்டு அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தால் உடனே அந்த படக்குழுவிற்கு தனது பாராட்டை தெரிவிப்பார் . சமீபத்தில் ஓடிடியில் வெளியான டாணாக்காரன் படத்தை பார்த்துவிட்டு விக்ரம் பிரபுவை பாராட்டினார். மேலும் யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி உள்ள ‘கே.ஜி.எஃப் 2’ படத்தை பாராட்டி இருந்தார் . விக்ரம் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கமலுக்கு போன் மூலம் தனது பாராட்டை தெரிவித்து இருந்தார் . சமீபத்தில் வெளியான ‘777 சார்லி’ மற்றும் நடிகர் மாதவன் இயக்கி நடித்து இருந்த ராகெட்ரி படத்தையும் பாராட்டி இருந்தார் .

இந்நிலையில் தற்போது ஆர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ திரைப்படம் இந்த வெள்ளியன்று ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் ‘இரவின் நிழல்’ படத்தைப் பற்றிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ஒவ்வொரு முறையும் ஒரு தனித்துவமான படத்தை உருவாக்கும் ஆர் பார்த்திபனின் முயற்சியைப் பாராட்டிய ரஜினிகாந்த், படத்தின் 29 நிமிட மேக்கிங் வீடியோவைப் பார்த்த போது தனக்கு வாத்து வந்ததாக கூறினார். சினிமாவின் சூப்பர் ஸ்டாரும் உலகிலேயே முதல் முறையாக ஒரே ஒரு ஷாட்டை நான்-லீனியராக மாற்றிய பார்த்திபனின் முயற்சியைப் பாராட்டி, அணி வெற்றி பெற வாழ்த்தியுள்ளார்.

Share.