விஜய்யின் ‘பீஸ்ட் படத்தை பார்த்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி… அவரின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ மற்றும் இயக்குநர் வம்சி படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘பீஸ்ட் திரைப்படம் நேற்று முன் தினம் (ஏப்ரல் 13-ஆம் தேதி) திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை ‘கோலமாவு கோகிலா, டாக்டர்’ புகழ் இயக்குநர் நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தை டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் பார்த்திருக்கிறார். படம் எதிர்பார்த்த அளவுக்கு நன்றாக இல்லாததால், ரஜினி அதிர்ச்சியடைந்துள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. ரஜினியின் 169-வது படத்தை ‘பீஸ்ட்’ இயக்குநர் நெல்சன் இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share.