‘கொரோனா’ தொற்றிலிருந்து மீண்ட ரஜினியின் ரீல் மகள்… இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் சாய் தன்ஷிகா. ‘மனதோடு மழைக்காலம், மறந்தேன் மெய்மறந்தேன், திருடி’ போன்ற சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் சாய் தன்ஷிகா ஹீரோயினாக அறிமுகமானது கன்னட மொழியில் வெளியான ‘கெம்பா’ என்ற படத்தில் தான். அதன் பிறகு தமிழில் ‘பேராண்மை’ என்ற படம் சாய் தன்ஷிகாவின் நடிப்புக்கு லைக்ஸ் போட வைத்தது.

‘பேராண்மை’ படத்துக்கு பிறகு சாய் தன்ஷிகாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான், பரதேசி, யாயா, திறந்திடு சீசே, கபாலி, எங்க அம்மா ராணி, உரு, சோலோ, விழித்திரு, காத்தாடி, காலக்கூத்து, இருட்டு’ என தமிழ் படங்கள் குவிந்தது. நடிகை சாய் தன்ஷிகா கன்னடம் மற்றும் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாள மொழி படத்திலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது சாய் தன்ஷிகா நடிப்பில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘லாபம்’ (தமிழ்), ‘யோகி டா’ (தமிழ்), ‘குழலி’ (தமிழ் / தெலுங்கு) என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகை சாய் தன்ஷிகாவுக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அதற்குரிய சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று தன்ஷிகா இன்ஸ்டாகிராமில் “கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.

Share.