ரஜினியின் ரீல் மகளுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நிவேதா தாமஸ். நிவேதா தாமஸ் அறிமுகமான முதல் படத்திலேயே டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்-க்கு தங்கச்சியாக நடித்திருந்தார். அந்த படம் தான் ‘குருவி’. அதன் பிறகு நடிகை நிவேதா தாமஸுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம், தர்பார்’ என படங்கள் குவிந்தது. இதில் ‘பாபநாசம்’ மற்றும் ‘தர்பார்’ ஆகிய இரண்டு படங்களிலும் சூப்பராக நடித்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார் நிவேதா தாமஸ். நிவேதா தாமஸ் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது நிவேதா தாமஸ் நடித்துள்ள புதிய தெலுங்கு படமான ‘வக்கீல் சாப்’ வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், நிவேதா தாமஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா டெஸ்ட் எடுத்தபோது எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

Share.