ஷங்கர் – ராம் சரண் இணையும் ‘RC15’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கும் புதிய படத்தில் டோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடிக்க உள்ளாராம். இப்படம் நடிகர் ராம் சரணின் கேரியரில் 15-வது படமாம். இதனை டோலிவுட்டில் பாப்புலர் தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு தனது ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளாராம்.

இது தயாரிப்பு நிறுவனம் ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’-யின் 50-வது படைப்பாம். இப்படம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாம். இதில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் அஞ்சலி நடிக்க உள்ளார்.

 

இதற்கு தமன் இசையமைத்து வருகிறாராம். இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இப்படத்துக்கான போட்டோஷூட் இன்று ஹைதராபாத்தில் உள்ள அன்னப்பூர்ணா ஸ்டுடியோஸில் நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்துக்கான பூஜையை நாளை (செப்டம்பர் 8-ஆம் தேதி) போடவும், ஷூட்டிங்கை செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கவும் ப்ளான் போட்டுள்ளனர்.


 

Share.