நடிகை குஷ்பூ – நடிகை ரம்பா குடும்பத்தினர் திடீர் சந்திப்பு… வைரலாகும் ஸ்டில்ஸ்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் ரம்பா. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமான ‘உழவன்’-யில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்த படத்துக்கு பிறகு ஹீரோயினாக ரம்பாவுக்கு அமைந்த படம் ‘உள்ளத்தை அள்ளித்தா’. சுந்தர்.சி இயக்கி கார்த்தி கதாநாயகனாக நடித்திருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது.

‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை ரம்பாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘செங்கோட்டை, சுந்தர புருஷன், சிவசக்தி, தர்ம சக்கரம், அருணாச்சலம், ராசி, வி.ஐ.பி, ஜானகி ராமன், நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, தேசிய கீதம், சுயம்வரம், மின்சார கண்ணா, உனக்காக எல்லாம் உனக்காக, சுதந்திரம், அன்புடன், ஆனந்தம், மிலிட்டரி, த்ரீ ரோஸஸ், பந்தா பரம சிவம், பெண் சிங்கம்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

நடிகை ரம்பா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி, போஜ்புரி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2010-ஆம் ஆண்டு நடிகை ரம்பாவுக்கு திருமணம் நடைபெற்றது. இவரின் கணவர் பெயர் இந்திர குமார் பத்மநாதன்.

ரம்பா – இந்திர குமார் பத்மநாதன் தம்பதியினருக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். தற்போது, ரம்பா குடும்பத்தினரும் பிரபல நடிகை குஷ்பூவின் குடும்பத்தினரும் நேரில் சந்தித்து பேசிக் கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுத்த ஸ்டில்ஸை ரம்பாவே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.