நம்ம ரம்யா கிருஷ்ணனா இது?… கவர்ச்சி போஸ் கொடுத்த வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படம் ‘வெள்ளை மனசு’. இதில் ஹீரோவாக YG.மகேந்திரன் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் சித்ராலயா கோபு இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் பல தமிழ் படங்கள் குவிந்தது. நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள புதிய தெலுங்கு படம் ‘லைகர்’. இப்படத்தினை பூரி ஜெகன்நாத் இயக்கி வருவதுடன், ‘தர்மா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தனது ‘பூரி கனெக்ட்ஸ்’ மூலம் தயாரித்தும் வருகிறார். இதில் ஹீரோவாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார்.

படத்தை தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் புரோமோஷனுக்காக நடிகை ரம்யா கிருஷ்ணன் மும்பைக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுத்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.