ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன்… வைரலாகும் ‘குயின்’ வெப் சீரிஸின் சீசன் 2 ஸ்டில்ஸ்!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படம் ‘வெள்ளை மனசு’. இதில் ஹீரோவாக YG.மகேந்திரன் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் சித்ராலயா கோபு இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் பல தமிழ் படங்கள் குவிந்தது. நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2019-ஆம் ஆண்டு ‘குயின்’ என்ற வெப் சீரிஸில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்.

இயக்குநர்கள் கெளதம் மேனன் – பிரசாத் முருகேசன் இயக்கிய இந்த வெப் சீரிஸில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ரோலில் ரம்யா கிருஷ்ணன் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். சமீபத்தில், இந்த சீரிஸின் சீசன் 2 ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

இதில் மிக முக்கிய ரோலில் நடிகை சோனியா அகர்வால் நடிக்கிறாராம். தற்போது, இதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.