சொக்க வைக்கும் பேரழகில் ரம்யா நம்பீசன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ரம்யா நம்பீசன். குழந்தை நட்சத்திரமாக சில மலையாள படங்களில் நடித்த ரம்யா நம்பீசன், ‘ஆனச்சந்தம்’ என்ற மலையாள படத்தில் தான் முதல் முறையாக ஹீரோயினாக நடித்தார். தமிழில் ரம்யா நம்பீசனுக்கு அமைந்த முதல் படம் ‘ஒரு நாள் ஒரு கனவு’.

அதன் பிறகு நடிகை ரம்யா நம்பீசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ராமன் தேடிய சீதை, ஆட்டநாயகன், இளைஞன், குள்ளநரி கூட்டம், பீட்சா, டமால் டுமீல், நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும், சேதுபதி, சத்யா, மெர்க்குரி, சீதக்காதி, அக்னி தேவி, நட்புனா என்னானு தெரியுமா’ என தமிழ் படங்கள் குவிந்தது.

ரம்யா நம்பீசன் மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது நடிகை ரம்யா நம்பீசன் நடிப்பில் ‘தமிழரசன், ரேஞ்சர், கெட்ட பையன் சார் இவன், ஆலம்பனா, பிளான் பண்ணி பண்ணனும்’ என ஐந்து தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இப்புது போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

1

2

3

4

 

View this post on Instagram

 

A post shared by RAMYA NAMBESSAN (@ramyanambessan)

Share.