‘பிக் பாஸ் அல்டிமேட்’டில் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரியான நடிகை ரம்யா பாண்டியன்… ஷாக்கான போட்டியாளர்கள்!

பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’யில் கடந்த ஜனவரி மாதம் 30-ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் சினேகன், தாமரைச் செல்வி, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், அபிராமி, சுஜா வருணி, ஷாரிக், வனிதா, தாடி பாலாஜி, ஜூலி, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், சுருதி, நிரூப் ஆகிய 14 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி சுஜா வருணி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி அபிநய் – ஷாரிக் இருவரும் எலிமினேட் செய்யப்பட்டார்கள். கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி வனிதா தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியேறி விட்டார்.

கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி வைல்ட் கார்ட் மூலம் சதீஷ் என்ட்ரி ஆனார், சுரேஷ் சக்கரவர்த்தி ரீ-என்ட்ரி ஆனார். கடந்த மார்ச் 6-ஆம் தேதி தாடி பாலாஜி எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ள புதிய ப்ரோமோ வீடியோவில் வைல்ட் கார்ட் மூலம் நடிகை ரம்யா பாண்டியன் என்ட்ரி ஆகியிருப்பது தெரியவந்துள்ளது.

Share.