துப்பாக்கி சுடும் பயிற்சியில் ரம்யா பாண்டியன் !

தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு என்கிற படம் மூலம் அறிமுகமாகி இருந்தவர் நடிகை ரம்யா பாண்டியன் .
இந்த படத்திற்கு பிறகு இவர் ஜோக்கர் படத்தில் நடித்தார் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இயக்குனர் ராஜு முருகன் இந்த படத்தை இயக்கி இருந்தார் . 2016-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தேசிய விருதை வென்றது .

இதன் பிறகு ஆண் தேவதை படத்தில் நடித்து இருந்தார் ரம்யா பாண்டியன் . இந்த படமும் சுமாரான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது . இவர் படங்களில் நடித்து இருந்தாலும் போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். அது வரை இளைஞர்கள் மட்டும் ரசித்து வந்த ரம்யா பாண்டியனை குடும்பங்களும் ரசித்தனர் . ரம்யா பாண்டியன் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘இராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ரம்யா பாண்டியனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பார் . அந்த வகையில் தற்போது ரம்யா பாண்டியன் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் . அதில் எதிர்பாராத விஷயங்கள் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினால், அப்படி எதுவும் இல்லை. கடந்த வார இறுதியில், நான் ஒரு புதிய ஆர்வத்தைத் தொடங்கி உள்ளேன் , தேசிய துப்பாக்கி சுடும் வீரர் 2டி நிறுவனத்தின் தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் என்னை வரம்பில் வைத்திருப்பதற்கும், எனக்கு கற்பித்ததற்கும், என்னை ஊக்குவித்ததற்கும் நன்றி. முதல் முறையாக, அதுவும் துப்பாக்கியுடன் Antolio Zoli 175வது ஆண்டு விழா, உலகின் ஒரே நூறு துப்பாக்கிகளில் ஒன்று. திருச்சியில் @royal_pudukkottai_sportsclub இல் இது ஒரு அற்புதமான அனுபவம். சிறந்த தொகுப்பாளராக இருப்பதற்கு #பிரித்விராஜ்தொண்டைமான் நன்றி என்று தெரிவித்துள்ளார் .

Share.