ரஞ்சித்தின் வேட்டுவம் படத்தில் நடிப்பது கமலா அல்லது விக்ரமா ?

இயக்குனர் பா .ரஞ்சித் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் சார்பட்டா பரம்பரை .இந்த படத்தில் ஆர்யா , பசுபதி , ஜான் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தனர் . சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . திரை அரங்கில் வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் படம் அமேசான் ஓடிடி தலத்தில் வெளியானது . படம் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது .

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து ஒரு படம் ரஞ்சித் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.
நடிகர் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மகான். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார் . பாபி சிம்ஹா , சிம்ரன் , துருவ் விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் . இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது . மேலும் இந்த படம் விளையாட்டை மையமாக வைத்து எடுக்க உள்ளதாகவும் அந்த படத்திற்கு மைதானம் என்ற தலைப்பை வைக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி இருந்தது .

மேலும் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது அதில் விழாவில் பேசிய இயக்குனர் ரஞ்சித் நடிகர் கமல்ஹாசனை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக கூறினார்.இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் ரஞ்சித் இயக்கும் படத்தின் போஸ்டர் வெளியானது . வேட்டுவம் என்கிற தலைப்பில் அந்த படம் வெளியாகி இருந்து . இதனால் அது ரஞ்சித் – விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தின் பெயரா அலலது ரஞ்சித் – கமல் கூட்டணியில் உருவாகும் படத்தின் பெயரா என்று பலர் குழப்பத்தில் இருந்தனர் . இந்நிலையில் வேட்டுவம் படம் பா.ரஞ்சித் இயக்கும் மற்றொரு படம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .இது விக்ரம் படத்தின் தலைப்பும் இல்லை கமல் படத்தின் தலைப்பும் இல்லை.

இந்த படத்தில் யார் நடிக்க போகிறார் என்ற தகவல் எல்லாம் ரஞ்சித் – விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு பிறகு தான் தெரியும் என்ற நம்பப்படுகிறது .

Share.