இதுவரை யாரும் பார்த்திராத காமெடி நடிகர்களுடைய குடும்பத்தினரின் ஸ்டில்ஸ்!

சினிமாவில் வலம் வரும் பிரபல காமெடி நடிகர்களுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ரசிகர்கள் எப்பவும் பிரபலங்களின் குடும்பத்தினர் யார்? என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். இதுவரை யாரும் பார்த்திராத தமிழ் சினிமா காமெடி நடிகர்களுடைய குடும்பத்தினரின் ஸ்டில்ஸ் இதோ…

1.வடிவேலுவின் குடும்பத்தினர் :

1

2

‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. சமீபத்தில், ‘ஆஹா’ என்ற பிரபல OTT தளத்தில் ஒரு அசத்தலான காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் வடிவேலு ஒப்பந்தமாகி உள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. தெலுங்கில் பாப்புலரான ‘ஆஹா’ OTT தளத்துக்கென தமிழில் தனியாக ஒரு சேனல் மிக விரைவில் ஆரம்பமாகப்போவது குறிப்பிடத்தக்கது. மிக விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடிவேலுவின் மனைவி பெயர் சரோஜினி, இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

2.சந்தானத்தின் குடும்பத்தினர் :

1

2

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். சந்தானம் நடிப்பில் ‘சபாபதி, டிக்கிலோனா, சர்வர் சுந்தரம்’ என மூன்று படங்கள் தற்போது லைன் அப்பில் இருக்கிறது. சந்தானம் 2004-ஆம் ஆண்டு உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

3.யோகி பாபுவின் குடும்பத்தினர் :

1

2

3

4

டைமிங் காமெடி மற்றும் டயலாக் மாடுலேஷன் தான் நடிகர் யோகி பாபுவின் ஸ்பெஷல். இப்போது, யோகி பாபு நடிப்பில் ‘வலிமை, பீஸ்ட், பன்னி குட்டி, அயலான், டாக்டர், சலூன், பேய் மாமா, கடைசி விவசாயி, அரண்மனை 3, டிக்கிலோனா, பொம்மை நாயகி’ என பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. கடந்த ஆண்டு (2020) மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார் யோகி பாபு. சமீபத்தில், யோகி பாபு – மஞ்சு பார்கவி தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

4.சூரியின் குடும்பத்தினர் :

1

2

3

டைமிங் காமெடி மற்றும் டயலாக் மாடுலேஷன் தான் நடிகர் சூரியின் ஸ்பெஷல். இப்போது சூரி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ஒரு படம் சூரிக்கு ரொம்பவும் ஸ்பெஷலாக இருக்கப் போகிறது. ஏனெனில், இப்படத்தில் சூரி கதையின் நாயகனாக வலம் வரப்போகிறார். ‘விடுதலை’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். சூரிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

5.செந்திலின் குடும்பத்தினர் :

1

2

காமெடி என்று சொன்னாலே செந்தில் – கவுண்டமணி ஆகிய இருவரின் பெயர்கள் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவர்களின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. இப்போது காமெடி நடிகர் செந்தில் கதையின் நாயகனாக ஒரு புதிய படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் மூலம் ஃபேமஸான சுரேஷ் சங்கையா இயக்கி வருகிறார். இதனை ‘சூப்பர் டாக்கீஸ்’ என்ற நிறுவனம் சார்பில் சமீர் பரத் ராம் தயாரித்து வருகிறார். சமீபத்தில், இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது, இதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. 1984-ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார் செந்தில். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

6.கவுண்டமணியின் குடும்பத்தினர் :

1

2

3

‘காமெடி’ என்று சொன்னாலே கவுண்டமணியின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் கவுண்டமணி பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம். கவுண்டமணி மற்றும் செந்தில் காம்போவில் உருவான காமெடி காட்சிகள் எத்தனை முறை பார்த்தாலும் குபீர் சிரிப்பை வரவைக்கும். பல படங்களில் காமெடியில் அசத்தியத்துடன் ’49-ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ போன்ற படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து ரசிகர்களை லைக்ஸ் போட வைத்தார் கவுண்டமணி. 1963-ஆம் ஆண்டு சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் கவுண்டமணி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

Share.