நயன்தாரா டு ரகுல் ப்ரீத் சிங்… ஹீரோயின்ஸ் தனது அம்மாவுடன் இருக்கும் ஸ்டில்ஸ்!

சினிமாவில் வலம் வரும் பிரபல நடிகைகளுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதுவரை யாரும் பார்த்திராத தமிழ் சினிமா நடிகைகள் தனது அம்மாவுடன் இருக்கும் ஸ்டில்ஸ் இதோ…

1.நயன்தாரா :

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்’, அறிமுக இயக்குநர் விக்னேஷ் படம், இயக்குநர் யுவராஜ் படம் மற்றும் மலையாளத்தில் ‘பாட்டு’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. நயன்தாரா அம்மாவின் பெயர் ஓமனா குரியன்.

2.ஷிவானி நாராயணன் :

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் சீசன் 3 மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ‘ஜீ தமிழ்’ சேனலில் ஒளிபரப்பான ‘இரட்டை ரோஜா’ சீரியல்களிலும் சூப்பராக நடித்து அசத்தி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். 19 வயதே ஆன ஷிவானி நாராயணனுக்கு கடந்த ஆண்டு (2020) அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. இப்போது கமல் ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் வில்லன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நடித்து வருகிறார். ஷிவானி அம்மாவின் பெயர் அகிலா நாராயணன்.

3.தமன்னா :

சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. இப்போது, தமன்னா நடிப்பில் தெலுங்கில் ‘சீட்டிமார், மேஸ்ட்ரோ, குர்துண்டா சீதகளம், F3, தட் இஸ் மகாலக்ஷ்மி’, ஹிந்தியில் ‘போலே சுடியான்’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இது தவிர ஜெமினி டிவியில் ‘மாஸ்டர் செஃப்’ (தெலுங்கு வெர்ஷன்) என்ற நிகழ்ச்சியை தமன்னா தொகுத்து வழங்கி வருகிறார். தமன்னா அம்மாவின் பெயர் ரஜனி.

4.அமலா பால் :

சினிமாவில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இப்போது நடிகை அமலா பால் நடிப்பில் ‘கேடவர்’ (தமிழ்), ‘ஆடு ஜீவிதம்’ (மலையாளம்), ‘அதோ அந்த பறவை போல’ (தமிழ்) என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், அமலா பால் நடித்த ‘குடி யெடமைதே’ (Kudi Yedamaithe) என்ற புதிய தெலுங்கு வெப் சீரிஸ் ‘ஆஹா’ என்ற OTT தளத்தில் வெளியானது. 8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸை ‘ஆஹா’ OTT தளத்தில் பார்த்த ரசிகர்களும், விமர்சகர்களும் பாராட்டிய வண்ணமுள்ளனர். அமலா பால் அம்மாவின் பெயர் அன்னிஸ் பால்.

5.ஜெனிலியா :

திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ஜெனிலியா. 2003-ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் ‘பாய்ஸ்’. இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்த படம் ஜெனிலியா தமிழில் அறிமுகமான முதல் படமாம். இப்படம் சூப்பர் ஹிட்டானதும் ஜெனிலியாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் பல படங்கள் இணைந்தது. 2012-யில் நடிகை ஜெனிலியா, பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெனிலியா அம்மாவின் பெயர் ஜேனெட் டிசோசோ.

6.காஜல் அகர்வால் :

திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கெளதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால். இப்போது காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் ‘இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா, கோஸ்டி, கருங்காப்பியம்’, தெலுங்கில் ‘ஆச்சார்யா’, ஹிந்தியில் ‘உமா’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. காஜல் அகர்வால் அம்மாவின் பெயர் சுமன் அகர்வால்.

7.த்ரிஷா :

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. ஆரம்பத்தில் ‘ஜோடி’ படத்தில் கெஸ்ட் ரோலில் மட்டுமே வந்து சென்றார். அதன் பிறகு ‘மௌனம் பேசியதே’ படத்தில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார் த்ரிஷா. ‘மௌனம் பேசியதே’ ஹிட்டிற்கு பிறகு த்ரிஷாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து அவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது த்ரிஷா நடிப்பில் ‘கர்ஜனை, ராங்கி, சுகர், சதுரங்க வேட்டை 2, ராம், பொன்னியின் செல்வன்’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. த்ரிஷா அம்மாவின் பெயர் உமா.

8.சமந்தா :

தெலுங்கு திரையுலகில் ‘ஏ மாயா சேசவே’ என்ற திரைப்படம் 2010-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருந்தார். இது தான் சமந்தா அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம். அதன் பிறகு தமிழ் திரையுலகில் ‘பாணா காத்தாடி’ மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்த சமந்தா, அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். 2017-ஆம் ஆண்டு நாகசைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. இப்போது, சமந்தா நடிப்பில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற தமிழ் படமும், ‘சகுந்தலம்’ என்ற தெலுங்கு படமும் லைன் அப்பில் இருக்கிறது. சமந்தா அம்மாவின் பெயர் நினெட்.

9.ராய் லக்ஷ்மி :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராய் லக்ஷ்மி. இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘சிண்ட்ரெல்லா, கேங்ஸ்டர் 21’, கன்னடத்தில் ‘ஜான்சி IPS’, தெலுங்கில் ‘ஆனந்த பைரவி’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. ராய் லக்ஷ்மி அம்மாவின் பெயர் மஞ்சுளா.

10.ரகுல் ப்ரீத் சிங் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு சினிமாவில் பல டாப் ஹீரோக்களுடன் டூயட் பாடிய ரகுல் ப்ரீத் சிங், தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது இவர் நடிப்பில் எட்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. ரகுல் ப்ரீத் சிங் அம்மாவின் பெயர் குல்விந்தர் சிங்.

Share.