எனக்கு இந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை ? – ராஷ்மிகா

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் சில வாரங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா , நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாக இருக்கிறது .

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் சீதா ராமம் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . தற்போது பேட்டி ஒன்றில் பேசிய ராஷ்மிகா சரித்திரப் படத்தில் நடிக்க வேண்டும் என்றும், ஒரு பயோபிக் படத்தில் நடிக்க வேண்டும்,” விளையாட்டை மையமாக கொண்ட படத்தில் நடிக்க வேண்டும் என்றும், என்றும் கூறியுள்ளார் . விரைவில் அவரது நிறைவேறும் என்று அவரது ரசிகர்களின் ஆசையாகவும் உள்ளது .

Share.