ராஷ்மிகா மந்தனாவின் வித்தியாசமான உணவு சேர்க்கை!

2014 ஆம் ஆண்டு வெளியான “கிரிக் பார்ட்டி” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் ராஷ்மிகா மந்தனா.

2012ஆம் ஆண்டு மாடலிங் துறையில் கால் பதித்த இவர், கன்னட படத்தில் அறிமுகமாகி கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வந்தார். “கீதா கோவிந்தம்” மற்றும் “டியர் காம்ரேட்” படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த இந்த அழகுப் பதுமை, எந்த நேர்காணலில் பேசினாலும் கூட அந்த வீடியோ இணையதளத்தில் வெகுவிரைவில் வைரலாகி விடும். அவ்வளவு க்யூட் என்று ரசிகர்களால் ரசிக்கப்படும் இந்த நடிகை தற்போது தனது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.

தற்போது ராஷிகா மந்தனா பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகவிருக்கும் “சுல்தான்” படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் “புஷ்பா” படத்தில் நடித்து வருகிறார். மேலும் கன்னட படமான “போகாரு”விலும் நடிக்கிறார். இவ்வாறு தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து தென்னிந்தியாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

தன்னுடைய சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தன்னுடைய வித்தியாசமான உணவு சேர்க்கை குறித்து வெளியிட்டுள்ள ராஷ்மிகா, தான் ரசத்துடன் பிரியாணி கலந்து சாப்பிடுவதாகவும், தயிர் சாதம் ஆகியவற்றோடு லேஸ் சேர்த்து சாப்பிடுவேன் அது மிகவும் நன்றாக இருக்கும் என்றும் வித்தியாசமான உணவு சேர்க்கை பற்றி கூறி தனது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

Share.