தொடங்கிய ‘இராவண கோட்டம்’ திரைப்படத்தின் ஷூட்டிங்!

இவர் கிகி விஜய்யை திருமணம் செய்துகொண்டார். இந்த லாக்டவுனில் தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் சாந்தனு பாக்கியராஜ், தன் மனைவியுடன் சேர்ந்து குறும்படம் ஒன்றை வெளியிட்டார்.

இந்த குறும்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான சிங்கிள் பாடலொன்றில் நடிகர் கலையரசன் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோருடன் சேர்ந்து இவர் நடனமாடியிருந்தார்.

சமீபத்தில் அவர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “இராவண கோட்டம்” திரைப்படத்தில் நடித்திருக்கும் செய்தியை வெளியிட்டு, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்கள்.

இந்த படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். மேலும் நடிகர் சாந்தனுவுக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி உள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த அப்டேட் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிட்டுள்ளார்கள்.

Share.