ராக்கெட்ரி படத்தை பார்த்த ஹ்ரித்திக் ரோஷன் !

நடிகர் மாதவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ராக்கெட்ரி . நடிகர் மாதவன் கதாநாயகனாகவும் நடிகை சிம்ரன் கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள் . சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். நடிகர் ஷாருக் கான் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார் மேலும் நடிகர் சூர்யா தமிழ் மொழியில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார் . இருவரும் இந்த சிறப்பு தோற்றத்தில் பணம் வாங்காமல் நடித்து உள்ளனர் .

இந்த படம் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி அவர்களின் கதை . இந்த படத்தில் நம்பி அவர்களின் 27வது முதல் 75 வரை அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களை படமாக எடுத்து உள்ளனர் .இந்த படம் கொரோனா காரணத்தினால் தொடர்ந்து திரையரங்கில் வெளியாவதில் தாமதமாகி வந்தது .

இந்நிலையில் ராக்கெட்ரி படம் ஜூலை 01-ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர் . அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மாதவனை புகழ்ந்து பதிவிட்டுள்ளார் . இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

Share.