தமிழ் சினிமா பிரபலங்களின் உண்மையான பெயர்கள் உங்களுக்கு தெரியுமா?

சினிமாவில் வலம் வரும் பல பிரபலங்களுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கும். பிரபலங்கள் மீது வைத்திருக்கும் அதீத அன்பால், அப்பிரபலங்களின் பெயரையே கையில் பச்சைக்குத்திக் கொள்ளும் அளவிற்கு ரசிகர்கள் ஏராளம். ஆனால், சில பிரபலங்களின் உண்மையான பெயர் வேறொன்றாகவும், திரையுலகில் நுழைந்த பிறகு தங்களது பெயரை மாற்றியும் இருப்பார்கள். அப்படி தங்களது பெயரை மாற்றிய பிரபலங்களின் லிஸ்ட் இதோ..

1.ஆர்யா :

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. இப்போது, ஆர்யா நடிப்பில் ‘எனிமி, சார்பட்டா பரம்பரை, அரண்மனை 3’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவரின் உண்மையான பெயர் ஜம்ஷத் செதிரகத். சினிமாவில் நுழைந்த பிறகு தன் பெயரை ஆர்யா என மாற்றிக் கொண்டார்.

2.ஏ.ஆர்.ரஹ்மான் :

சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். இப்போது ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இயக்குநர் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’ (தமிழ்), நடிகர் விக்ரமின் ‘கோப்ரா’ (தமிழ்), தனுஷின் ‘அட்ராங்கி ரே’ (ஹிந்தி), நடிகர் சிலம்பரசனின் ‘பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன்’ (தமிழ்) என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவரின் உண்மையான பெயர் ஏ.எஸ்.திலீப் குமார்.

3.ஜீவா :

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஜீவா. இப்போது நடிகர் ஜீவா நடிப்பில் தமிழில் ‘மேதாவி’, அறிமுக இயக்குநர் சந்தோஷ் ராஜன் படம் மற்றும் ஹிந்தியில் ’83’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவரின் உண்மையான பெயர் அமர். சினிமாவில் நுழைந்த பிறகு தன் பெயரை ஜீவா என மாற்றிக் கொண்டார்.

4.நயன்தாரா :

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் மலையாளத்தில் ‘நிழல், பாட்டு’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவரின் உண்மையான பெயர் டயானா மரியாம் குரியன்.

5.ரஜினிகாந்த் :

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படமான ‘அண்ணாத்த’யை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சிவா இயக்கி வருகிறார். ரஜினியின் உண்மையான பெயர் சிவாஜி ராவ். சினிமாவில் நுழைந்த பிறகு தன் பெயரை ரஜினிகாந்த் என மாற்றிக் கொண்டார்.

6.விக்ரம் :

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவரின் உண்மையான பெயர் கென்னடி ஜான் விக்டர். சினிமாவில் நுழைந்த பிறகு தன் பெயரை விக்ரம் என மாற்றிக் கொண்டார்.

7.விஜய் :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் புதிய படமான ‘தளபதி 65’யை நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது. விஜய்யின் முழு பெயர் ஜோசப் விஜய்.

8.சூர்யா :

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. ‘சூரரைப் போற்று’ படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கும் ‘நவரசா’, வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ மற்றும் பாண்டிராஜ் இயக்கும் ‘சூர்யா 40’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவரின் உண்மையான பெயர் சரவணன். சினிமாவில் நுழைந்த பிறகு தன் பெயரை சூர்யா என மாற்றிக் கொண்டார்.

9.சினேகா :

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சினேகா. இப்போது, சினேகா நடிப்பில் தமிழில் ‘வான்’, மலையாளத்தில் ‘9MM’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவர் படங்கள் தவிர நிறைய விளம்பர படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். இவரின் உண்மையான பெயர் சுஹாசினி ராஜாராம் நாயுடு. சினிமாவில் நுழைந்த பிறகு தன் பெயரை சினேகா என மாற்றிக் கொண்டார்.

10.ரேவதி :

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரேவதி. இவர் நடிப்பில் தமிழில் ‘எரியும் கண்ணாடி’, ‘நவரசா’, ‘மேஜர்’ (ஹிந்தி / தெலுங்கு) என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவரின் உண்மையான பெயர் ஆசா கேளுண்ணி குட்டி. சினிமாவில் நுழைந்த பிறகு தன் பெயரை ரேவதி என மாற்றிக் கொண்டார்.

Share.