வைரலாகும் அஜித் தன் கைப்பட எழுதிய கடிதம்… இதில் யாருக்கு நன்றி சொல்லியிருக்காருன்னு தெரியுமா?

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.

இந்த படம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தையும் இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரிக்க உள்ளாராம். இதற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதன் ஷூட்டிங்கை இந்த ஆண்டு (2022) இறுதியில் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று அஜித் கேரளாவில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. தற்போது, அஜித் கேரளாவில் ஆயூர்வேத சிகிச்சைக்காக தான் சென்றார் என தகவல் கிடைத்துள்ளது. மேலும், அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து அஜித் தன் கைப்பட ஒரு கடிதம் எழுதியுள்ளாராம். அந்த கடிதம் இப்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.