நடிகை ஸ்ரீதேவியை திருமணம் செய்ய மறுத்த ‘உலக நாயகன்’ கமல் ஹாசன்… என்ன காரணம் தெரியுமா?

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிக்கும் புதிய படமான ‘விக்ரம்’-யின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இது தவிர ஷங்கரின் ‘இந்தியன் 2’, இயக்குநர் மகேஷ் நாராயணன் படம், இயக்குநர் வெற்றிமாறன் படம், இயக்குநர்.பா.இரஞ்சித் படம் என கமல் லைன் அப்பில் நான்கு படங்கள் இருக்கிறது. இந்நிலையில், கமலும், மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி பற்றியும் பரவி வந்த ஒரு செய்திக்கு பதில் கிடைத்துள்ளது.

நடிகர் கமல் ஹாசனும், நடிகை ஸ்ரீதேவியும் இணைந்து ‘மூன்றாம் பிறை, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு, வாழ்வே மாயம், மூன்று முடிச்சு’ போன்ற பல படங்களில் நடித்துள்ளனர். அப்போது, இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாகவும், திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. பின், ஸ்ரீதேவியின் அம்மாவே கமலிடம் “என் மகளை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கேட்டிருக்கிறார். ஆனால், கமலோ “ஸ்ரீதேவியும், நானும் ஜோடியாக பல படங்களில் நடித்திருந்தாலும், அவள் என்னை ‘சார்’ என்றே அழைத்து வருகிறார். நானும் அவளை என் தங்கையாகவே பார்க்கிறேன்” என்று கூறி விட்டாராம்.

Share.