ஷாருக்கான் விஜய்க்கு ட்வீட் செய்ய இது தான் காரணமா ?

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியாகிறது .இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் . சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது .

இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் ஹிந்தி ட்ரைலரை நடிகர் வருண் தவான் வெளியிட்டார் . தமிழில் இந்த படத்திற்கு இருக்கும் வரவேற்பு மற்ற மொழியில் குறிப்பாக ஹிந்தியில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் பீஸ்ட் படத்தின் ட்ரைலரை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். மேலும் இயக்குனர் அட்லீ போலவே தானும் விஜயின் ரசிகன் என்று கூறியுள்ளார் . பீஸ்ட் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார் .

இதனை விஜய் ரசிகர் கொண்டாடினாலும் , படத்தின் விளம்பரத்துக்காக விஜய் தரப்பிலிருந்து ஷாருக் கானிடம் பேசி அவரை ட்வீட் போட வைத்துள்ளார் என்று சிலர் கருதுகின்றனர் . இதன் காரணமாக தான்
ஷாருக்கான் அந்த ட்வீட் செய்துள்ளார் இன்று நம்புகின்றனர் .ஆனால் நடிகர் விஜய் இதுவரையில் நடிகர் ஷாருக்கானிற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்யவில்லை. இதனால் ஷாருக்கான் ரசிகர்கள் சற்று அப்செட்டாக உள்ளனர் .

முன்னதாக ஷாருக்கான் விஜய்யின் பிகில் படத்தின் ட்ரைலரையும் இணையத்தில் ஏற்கனவே பகிர்ந்துள்ளார்என்பதுகுறிப்பிடத்தக்கது.

Share.