கமலின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி கணேசன்… காரணம் என்ன தெரியுமா?

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இப்போது இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவு பெற்றது.

பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘கைதி’ அர்ஜுன் தாஸ் – நரேன் ஆகியோர் பவர்ஃபுல்லான வில்லன் ரோல்களில் நடித்துள்ளனர். படத்தை வருகிற ஜூன் 3-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

கமலின் கேரியரில் மிகப் பெரிய வெற்றியடைந்த படம் ‘அவ்வை சண்முகி’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். இதில் கமலுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோலில் ஜெமினி கணேசன் நடித்திருந்தார். ஆனால், அந்த ரோலில் நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் முதல் சாய்ஸாக இருந்தது நடிகர் சிவாஜி கணேசன் தானாம்.

சிவாஜிக்கு இப்படத்தின் கதையை கேட்டதும் மிகவும் பிடித்து விட்டதாம். ஆனால், அப்போது சிவாஜியின் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால், சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருந்தாராம். பின், சிவாஜியே அந்த ரோலுக்கு ஜெமினி கணேசன் பொருத்தமாக இருப்பார் என்று கமலிடம் சொன்னாராம்.

Share.