‘மாநாடு’ சக்ஸஸ் மீட்… அந்த விஷயத்துக்காக தான் சிலம்பரசன் TR கலந்துகொள்ளவில்லையா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவர் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்த ‘மாநாடு’ திரைப்படம் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தில் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷனும், வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருந்தனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் பிரேம்ஜி அமரன், மனோஜ் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

‘V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தை ‘SSI புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுப்பையா ரிலீஸ் செய்திருந்தார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில், இந்த படத்துக்கான சக்ஸஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இந்த சக்ஸஸ் மீட்டில் படத்தில் நடித்தவர்கள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால், நடிகர் சிலம்பரசன் கலந்து கொள்ளவில்லை.

இது குறித்து நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரிக்கையில் “சிலம்பரசன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் இப்படம் ரூ.108 கோடி வசூல் செய்ததாக ஒரு போஸ்டர் ஒட்ட வேண்டும், அதையே சக்ஸஸ் மீட்டிலும் பேனராக வைக்க வேண்டும். இதை செய்தால் நான் சக்ஸஸ் மீட்டில் கலந்து கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறாராம். இதை கேட்டதும் சுரேஷ் காமாட்சி “இப்படம் அவ்வளவு வசூல் செய்யவில்லை. அதனால் நீங்கள் சொன்ன தொகையை போட்டால் எனக்கு வருமான வரித்துறையினரால் பிரச்சனை வரும்” என்று சொல்லி மறுத்து விட்டாராம். இதனால் கடுப்பான சிலம்பரசன் சக்ஸஸ் மீட்டில் கலந்து கொள்ளவில்லையாம்.

Share.