திருமூர்த்தியின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் !

இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து மிகப் பெரிய வெற்றியை பெற்ற படம் விக்ரம் .இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் உருவாகி இருந்தது . மேலும் நடிகர் சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அசத்தி இருந்தார் .

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார் . .இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல என்கிற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . குறிப்பாக இந்த படத்திற்கு பல ரசிகர்கள் தங்களது பாணியில் நடனமாடி இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தனர் . இந்த பாடலை இது வரை 60 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து உள்ளனர் .

இந்நிலையில் அண்ணாத்த படத்தில் வா சாமி என்கிற பாடலை பாடிய பாடகர் திருமூர்த்தி பத்தல பத்தல பாடலை பாடி இருந்தார் . இந்த பாடிய அந்த வீடியோ வைரலாகியது . இதனை தொடர்ந்து நடிகர் கமல் பாடகர் திருமூர்த்தி நேரில் சந்தித்து பாராட்டி உள்ளார். மேலும் பார்வையற்ற பாடகர் திருமூர்த்தியை ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம் மியூசிக் கன்சர்வேட்டரியில் முறையாக இசை கற்க சேர்த்துள்ளார் நடிகர்
கமல்ஹாசன். நடிகர் கமலின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது .

Share.