நடுரோட்டில் பயில்வான் ரங்கநாதனை வறுத்தெடுத்த நடிகை !

பயில்வான் ரங்கநாதன் என்பவர் ஓர் நடிகர் மட்டுமில்லை திரைப்பட விமர்சகராவார். இவர் குறிப்பாகத் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் துணை பாத்திரங்களில் நடித்து இருக்கிறார் .

ரங்கநாதன் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், சிறுதொண்டநல்லூரைச் சேர்ந்தவர். சிறுத்தொண்ட நல்லூரில் உள்ள ஸ்ரீ முத்துமலையம்மன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், சாயர்புரத்தில் உள்ள போப் கல்லூரியில் கல்லூரி படிப்பை மேற்கொண்டார். இவர் பளுதூக்குதலில் ஆர்வம் கொண்டவர். நடிகராவதற்கு முன் காவல் துறையில் இணைந்து பணியாற்றும் விருப்பம் கொண்டவராக இருந்தார். இவர் மிஸ்டர் சென்னை பட்டத்தைப் பெற்றார். இவரது உடல் வாகைப் பார்த்து எம். ஜி. இராமச்சந்திரன் பயில்வான் என்று அழைத்தார். அதுவே இவரது அடைமொழியாக ஆனது. இவர் முந்தானை முடிச்சு படத்தில் வைத்தியர் வேடத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார்.

இந்நிலையில் இவர் சமூக வலைத்தளங்களில் நடிகர்கள் ,நடிகைகள் பற்றி பல கிசு கிசு பேசுவதை வழக்கமாக கொண்டு உள்ளார் . இதனால் இவரது பேச்சுக்கு பல எதிர்ப்புகள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் உள்ளது . இந்த நிலையில் இரவின் நிழல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரேகா நாயர் என்ற நடிகையை பற்றி தவறாக பேசி உள்ளார் .

இந்த பதிவை பார்த்த ரேகா பயில்வானிடம் நேரடியாக சென்று பேசி உள்ளார் .அங்கு வாக்குவாதம் முற்றிப்போக ரேகா ஆபாச வார்த்தைகளால் திட்டி பேசி உள்ளார் . தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது .

Share.