நடிகர் அருள்நிதியின் “டி ப்ளாக் ” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

நடிகர் அருள்நிதி 2010-ஆம் ஆண்டு வம்சம் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார் . அதன் பிறகு உதயன் , மௌன குரு , டிமான்டி காலனி , என்று பல படங்களில் நடித்து இருக்கிறார் .இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார் . அதனால் இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது .

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் களத்தில் சந்திப்போம் . இந்த படத்தின் நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்து இருந்தார் அருள்நிதி. மஞ்சிமா மோகன் , ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள் . யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . 22 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி இருந்தது . 47 கோடி ரூபாய் இந்த படம் வசூல் செய்துள்ளது .

இந்நிலையில் நடிகர் அருள்நிதி அடுத்து நடித்துள்ள படம் பற்றின தகவல் வெளியாகி இருக்கிறது . அந்த படத்திற்கு ” டி ப்ளாக் ” என்று தலைப்பு வைத்துள்ளனர் .எருமை சாணி வளையொளி புகழ் விஜய் இந்த படத்தை இயக்கி இருக்கிறார் .ஜூலை 1-ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது .

Share.