பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா நடிகர் ரியோ ராஜ்?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விஜேவாக இருந்து பின்பு ஹீரோவாக தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் நடிகர் ரியோ ராஜ்.

2017 ஆம் ஆண்டு வெளியான சத்ரியன் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரியோ ராஜ் 2019ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் “நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா” என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

தற்போது பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் “பிளான் பண்ணி பண்ணனும்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் விரைவில் இந்த திரைப்படம் வெளியாவதற்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் தற்போது பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 4ல் இவர் கலந்து கொள்கிறார் என்ற செய்தி வெளியானது. தற்போது இதை உறுதி செய்யும் விதமாக “என் தேர்வுகள் தப்பாக இருக்கலாம், ஆனால் என் செயல்கள் எப்போதும் தப்பாக இருக்காது” என்று கேப்ஷனுடன் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் இவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல தயாராக இருக்கிறார் என்று தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

https://www.instagram.com/p/CF4YuRDBTaj/?igshid=781nqjnlruhj

Share.