‘டேய்’ பாடலுக்கு செம்ம செக்ஸியாக நடனமாடிய ‘இறுதிச்சுற்று’ புகழ் ரித்திகா சிங்… குவியும் லைக்ஸ்!

2016-ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியான படம் ‘இறுதிச்சுற்று’. பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக மாதவன் நடித்திருந்தார். ஹீரோயினாக ரித்திகா சிங் நடித்திருந்தார். ரியல் லைஃபில் கிக் பாக்ஸரான ரித்திகா சிங் ‘இறுதிச்சுற்று’ படத்திலும் பாக்ஸராக வலம் வந்திருந்தார்.

‘இறுதிச்சுற்று’ படத்துக்கு பிறகு விஜய் சேதுபதியின் ‘ஆண்டவன் கட்டளை’, ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’, அசோக் செல்வனின் ‘ஓ மை கடவுளே’ ஆகிய தமிழ் படங்களில் நடித்தார் ரித்திகா சிங். இவர் தமிழ், ஹிந்தி மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார்.

இப்போது, ரித்திகா சிங் நடிப்பில் ‘வணங்காமுடி’ மற்றும் ‘கொலை’ என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் நடித்துள்ள ‘டேய்’ என்ற புதிய மியூசிக் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இன்பராஜ் ராஜேந்திரன் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு சதீஷ் கிருஷ்ணன் நடனம் அமைத்து, இயக்கியிருக்கிறார். இந்த பாடல் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Share.