ஆர்.ஜே.பாலாஜியின் காமெடி படமான ‘வீட்ல விசேஷம்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஹிந்தி திரையுலகில் 2018-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பதாய் ஹோ’. இந்த படத்தை இயக்குநர் அமித் ஷர்மா இயக்கியிருந்தார். இதில் ஆயுஷ்மான் குரானா, நீனா குப்தா, கஜ்ரஜ் ராவ், சன்யா மல்ஹோத்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் ஹிந்தியில் மெகா ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றினார். இதில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்ததுடன், அவரே NJ.சரவணனுடன் இணைந்து இப்படத்தை இயக்கவும் செய்துள்ளார்.

‘வீட்ல விசேஷம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இதில் மிக முக்கிய ரோல்களில் சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இன்று இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற ஜூன் 17-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Share.