ப்ளாக் ஷீப் விக்னேஷ் காந்த் திருமணத்தில் சிவகார்த்திகேயன் !

ப்ளாக் ஷீப் விக்னேஷ் காந்த் அவர்களுக்கு தற்போது திருமணம் நடந்து உள்ளது . பிரபல ரேடியோவில் ஆர்.ஜே-வாக பணியை தொடங்கிய ஆர்.ஜே.விக்னேஷ் காந்த . மேலும் இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார் . மேலும் ப்ளாக் ஷீப் என்கிற வலையொளி ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் பல திறமைகளுக்கு வாய்ப்பு வழங்கி இருந்தார் .

இது மட்டுமில்லமல் சில திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார் . ஹிப் ஹாப் ஆதி இயக்கிய மீசையை முறுக்கு என்கிற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் . மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களும் இவருக்கு நெருக்கமான நண்பர் . இவர் வை ராஜா வை மற்றும் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா ஆகிய படங்களில் தலா ஒரு பாடலையும் எழுதி உள்ளார் .

இந்நிலையில் விக்னேஷ் காந்த் அவர்களுக்கு திருமணம் நடந்து உள்ளது . அவர்கள் உறவினர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்து உள்ளது .நடிகர் சிவகார்த்திகேயன் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார் .தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது .

Share.