ஓ.டி.டியில் வெளியாக இருக்கும் விக்னேஷ் சிவன் படம்!

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து நடத்தும் தயாரிப்பு ‘ரவுடி பிக்சர்ஸ்’ . இந்த தயாரிப்பு நிறுவனம் சார்பாக சமீபத்தில் வெளியான படம் ராக்கி . இந்த படத்தில் வசந்த் ரவி கதாநாயகனாக நடித்து இருந்தார். மேலும் இயக்குனர் பாரதிராஜா இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் . இந்த படத்தை எழுதி இயக்கி இருந்தார் அருண் மாதேஸ்வரன்.

இளைஞர்களின் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படத்திற்கு தர்புகா சிவா இசை அமைத்து இருந்தார் . ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் . இந்த படத்தில் ஒளிப்பதிவு மிகவும் அனைவராலும் பாராட்டப்பட்டது . இந்த படத்தை பெரும்பாலான ரசிகர்கள் திரையரங்கில் பார்க்கவில்லை . ஆனால் ஓ.டி.டியில் வெளியான பிறகு இந்த படம் படத்தை பார்க்கலாம் என்று பலர் காத்து இருந்தனர.

பொதுவாக ஒரு படம் திரைக்கு வந்த முப்பது நாட்களில் ஓ.டி.டியில் வெளியாகி விடும் . ஆனால் ராக்கி படம் வெளியாகி முப்பது நாட்கள் மேலாகியும் ஓ.டி.டியில் வெளியாகவில்லை .இந்த நிலையில் தற்பொழுது ராக்கி படம் ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்ற தகவல் வெளியாக இருக்கிறது.

Share.