“விஜய் சார் ஒரு ‘சூப்பர் ஸ்டார்’, அவரோட டான்ஸுக்கு நான் மிகப் பெரிய ஃபேன்”… வைரலாகும் Jr.NTR பேசிய வீடியோ!

‘பாகுபலி’யை தொடர்ந்து பிரம்மாண்ட படைப்பான ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR)-ஐ இயக்கியிருக்கிறார் டாப் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி. இப்படத்தினை D.V.V. தானய்யா தனது ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் தயாரித்துள்ளாராம். தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ள இப்படத்தை வருகிற ஜனவரி மாதம் 7-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலியா பட், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் நடித்துள்ளார்கள். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட மாஸான ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. தற்போது, நியூ இயர் ஸ்பெஷலாக விஜய் டிவிக்கு ‘RRR’ படத்தின் புரமோஷனுக்காக ராஜமௌலி, ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் சிறப்பு பேட்டி கொடுத்துள்ளனர்.

இதன் ப்ரோமோ வீடியோவை இன்று விஜய் டிவி ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இதில் ஜூனியர் என்.டி.ஆரிடம் ‘தளபதி’ விஜய் பற்றி கேட்கையில் “விஜய் சார் ஒரு சூப்பர் ஸ்டார். ரொம்ப அன்பானவர். பல முறை நான் அவர்கிட்ட பேசியிருக்கேன். கடைசியா நான் ‘மாஸ்டர்’ படம் பார்த்துட்டு அவர்கிட்ட போன்ல பேசுனேன். நம்ம எவ்ளோ தான் அவரை பற்றி பேசினாலும் அது பத்தாது. நான் அவரோட டான்ஸுக்கு மிகப் பெரிய ஃபேன். அவர்கிட்ட டான்ஸ் பத்தியும் பேசியிருக்கேன்” என்று கூறியுள்ளார்.

Share.