“சூப்பர்டா தம்பி தனுஷ்”… ‘ஜகமே தந்திரம்’ குறித்து ட்வீட் போட்ட ‘அவெஞ்சர்ஸ் : எண்ட் கேம்’ இயக்குநர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர், மாரி செல்வராஜ், பாலாஜி மோகன் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 11 படங்கள் லைன் அப்பில் இருந்தது

இதில் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ரிலீஸுக்காக தனுஷின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில், இன்று (ஜூன் 18-ஆம் தேதி) இப்படம் பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’யில் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், பொலிஸ், போர்ச்சுகீஸ், பிரேசிலியன், ஸ்பானிஷ் (கேஸ்டிலியன்), ஸ்பானிஷ் (நியூட்ரல்), தாய், இந்தோனேஷியன், வியட்நாமிஸ் என 17 மொழிகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுடன் சேர்ந்து ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். தற்போது, இந்த படம் வெற்றிபெற வேண்டும் என ‘அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் : எண்ட் கேம்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர்கள் அந்தோணி ருஸ்ஸோ – ஜோ ருஸ்ஸோ வாழ்த்தி ட்வீட் போட்டுள்ளனர்.

இதனை தொடரந்து தனுஷ் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்து உள்ளனர். இயக்குநர்கள் அந்தோணி ருஸ்ஸோ – ஜோ ருஸ்ஸோ இயக்கி வரும் ஹாலிவுட் படமான ‘தி க்ரே மேன்’யில் மிக முக்கிய ரோலில் தனுஷ் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Share.