பீஸ்ட் படம் பார்த்த S.A.சந்திரசேகர் ! என்ன சொன்னார் தெரியுமா ?

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட் .இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார் .கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த படத்திற்கு மிகப்பெரிய ஒபெனிங் கிடைத்துள்ளது ஆனால் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்த காரணத்தினாலும் ,‘கே.ஜி.எஃப் 2 ” படத்தின் ஏற்பட்டுள்ள நல்ல வரவேற்பு காரணமாக இந்த படத்தின் வசூல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை S.A.சந்திரசேகர் அவர்கள் பீஸ்ட் படத்தை பார்த்து உள்ளார் . படத்தை பற்றி அவர் பேசும்போது அரபிக் குத்து பாடலை தன்னை மறந்து ஒரு ரசிகனாக ரசித்தேன் . படத்தை விஜய் தான் தாங்கி உள்ளார் . மேலும் பீஸ்ட் படத்தில் ஒரு இசையமைப்பாளர் இருக்கிறார் , ஒரு சண்டை மாஸ்டர் இருக்கிறார் , ஒரு டான்ஸ் மாஸ்டர் இருக்கிறார்,ஒரு எடிட்டர் இருக்கிறார் , ஒரு ஹீரோ இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார் மேலும் பீஸ்ட் படத்தில் இயக்குனர் என்ற ஒருவர் இல்லையா என்ற கேள்விக்கு எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தார் . இதன் காரணமாக படத்தின் எதிர்மறை விமர்சனங்களுக்கு நெல்சன் தான் காரணம் என்று மறைமுகமா கூறி இருக்கிறார் S.A.சந்திரசேகர்.

Share.