கே.ஜி.எஃப் 2 படத்தை பார்த்த S.A.சந்திரசேகர் ! என்ன சொன்னார் தெரியுமா ?

நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படமும் யஷ் நடிப்பில் உருவான கே.ஜி.எஃப் 2 படமும் ஒரு நாள் இடைவேளையில் வெளியானது . பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்தார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது . இந்த படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது ஆனால் இந்த படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை பெற்றது . இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை S.A.சந்திரசேகர் பீஸ்ட் படத்தை பார்த்துவிட்டு படத்தில் நடன இயக்குனர் , சண்டை மாஸ்டர் , எடிட்டர் என பலர் இருக்கிறார்கள் இயக்குனர் மட்டும் இல்லை என் சொல்லியிருந்தார் .

பீஸ்ட் படத்துடன் இணைந்து வெளியான கே.ஜி.எஃப் 2 படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை இந்திய முழுவதும் பெற்று வருகிறது . வசூல் ரீதியாகவும் இந்த படம் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது .
இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை S.A.சந்திரசேகர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கே.ஜி.எஃப் 2 படத்தை பற்றி பேசி உள்ளார் . அதில் படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருப்பதாகவும் ஆனால் அதை எல்லாம் ரசிகர்கள் கவனிக்காமல் ரசிகர்களை படத்தை ரசிக்க வைத்தது சிறப்பு என சொல்லி இருக்கிறார் . படத்தின் திரைக்கதை சிறப்பாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் . மேலும் படத்தில் நடித்த நடிகர் யஷ் மற்றும் இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகியோரை பாராட்டி பேசி உள்ளார் . மேலும் அந்த பேட்டியில் நடிகர் விஜய் பற்றியும் , அவரது குடும்பம் , படம் உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார் .


இந்நிலையில் நடிகர் விஜய் அவரது 66-வது படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அடுத்து ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என்றும் செய்தி வெளியாகி இருக்கிறது . இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் நடிகர் விஜய் நெல்சனுடன் இயக்கத்தில் விஜய் நடிப்பாரா என்கிற கேள்விக்கு தனக்கு தெரியாது என சொல்லிவிட்டார்.

Share.