அதிதி ஷங்கரை பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அறியப்படுபவர் இயக்குனர் ஷங்கர் . 1993-ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் . இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் கதாநாயகனாக நடித்து இருந்தார். காதலன் , இந்தியன் , ஜீன்ஸ் , முதல்வன் என் அடுத்து அடுத்து பல வெற்றிப் படங்களை கொடுத்து இருந்தார் . கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான படம் 2.o . இந்த படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி இருந்தது .இதனை தொடர்ந்து இந்தியன் 02 படத்தை இயக்கி வந்தார் . இந்த நிலையில் இந்தியன் 02 படப்பிடிப்பு பல காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது . தற்பொழுது இயக்குனர் ஷங்கர் நடிகர் ராம் சரணை வைத்து படம் இயக்கி வருகிறார் .

இந்நிலையில் இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆக உள்ளார் . இந்த படத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து இருக்கிறார் . விருமன் படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருக்கிறது .

விருமன் படத்தின் முதல் பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இந்த பாடலை பார்த்த இயக்குனர் மற்றும் நடிகரான எஸ்.ஜே.சூர்யா அதிதி ஷங்கரை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .

அதில் “விருமன், கஞ்சாப்பூவு கண்ணாலே…வாட் எ சாங்…கார்த்தி பருத்திவீரன் மாதிரியும், அதிதி ஷங்கர், அனுபவம் மிக்க நடிகை போலவும் இருக்கிறார்கள். குறிப்பாக 3.11 முதல் 3.16 வரையில் அதிதியின் அறிமுகப் படம் என்றே நம்ப முடியவில்லை,” என அதிதி அற்புதமாக நடனமாடி இருப்பதைப் பாராட்டியுள்ளார்.

யுவன் , கார்த்தி ,அதிதி என அனைவரையும் பாராட்டியுள்ளார் . மேலும் இதற்கு நன்றி தெரிவித்துள்ள அதிதி ஷங்கர் ‘தலைவரே, எனக்கு ஒண்ணும் புரியலை தலைவரே, என்னிடம் வார்த்தைகள் இல்லை சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார் அதிதி. இந்த இரண்டு டீவீட்களும் பலரால் பகிரப்பட்டு வருகிறது .

Share.