கீர்த்தி சுரேஷுக்கு கை கொடுக்குமா சாணி காயிதம்

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த . இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தங்கையாக நடித்து இருந்தார் கீர்த்தி சுரேஷ் . மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று ரசிகர்களை ஏமாற்றியது . இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஓடிடியில் வெளியாகும் சாணி காயிதம் படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது .

சாணி காயிதம் படத்தை ராக்கி படத்தை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கிறார். நடிகர் செல்வராகவன் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் . இந்த படத்தின் கதை 1980களில் நடுக்கம் கதையை எடுத்து இருக்கிறார்கள் .ஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது .யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார் .

இந்நிலையில் படத்தை மே 06 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில்
ஓ. டி டியில் வெளியான பெண்குயின் ,மிஸ் இந்தியா ஆகிய படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை . இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசி கொள்கிறார்கள் எனவே இந்த படம் திருப்பு முனையாக கீர்த்தி சுரேஷுக்கு அமையும் என்று நம்பப்படுகிறது .

Share.