லேடி பவர் ஸ்டார் பட்டத்தை உதறிய சாய் பல்லவி !

கஸ்தூரி மான் , தாம் தூம் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் நடிகை சாய் பல்லவி. அதன் பிறகு பிரேமம் என்கிற மலையாள படம் மூலம் நாயகியாக அறிமுகமானார் . தமிழ் , தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சாய் பல்லவிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது . நேரடி தமிழ் திரைப்படம் நடிப்பதற்கு முன்பே தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் . பிரேமம் படத்திற்கு பிறகு களி என்கிற படத்தில் நடித்தார் அதன் பிடா என்கிற தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார் . தமிழில் தியா என்கிற படத்தில் நடித்தார் , நடிகர் தனுஷுடன் இணைந்து மாறி 2 , சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார் .

சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஷியாம் சிங்காராய் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .இவர் நடிப்பில் விராட பர்வம் திரைப்படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியானது. ராணா டகுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சாய் பல்லவி பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் விராட பர்வம் நிகழ்ச்சியில் புஷ்பா பட இயக்குனர் சுகுமார் அவரை லேடி பவன் கல்யாண் என்று அழைக்க பவன் கல்யாண் ரசிகர்கள் அவரை லேடி பவர் ஸ்டார் என்று அழைக்க, இப்போது அவர் தெலுங்கில் லேடி பவர் ஸ்டார் ஆகிவிட்டார். ஆனால் சாய் பல்லவி லேடி பவர் ஸ்டார் பட்டத்தை ஏற்க விரும்பவில்லை என்ற செய்தி வெளியாகி இருக்கிறது .

நடிகை சாய் பல்லவி இது பற்றி பேசி உள்ளார் அதில் எனது பெயருக்கு முன்போ, பின்போ எந்த பட்டமும் போட்டுக் கொள்வது சரியல்ல. நான் படித்து வாங்கிய டாக்டர் பட்டம் எனக்கு போதும். தயவு செய்து என்னை லேடி பவர் ஸ்டார் என அழைக்காதீர்கள். இது போன்ற பட்டங்கள் என்னை ஈர்க்காது. ரசிகர்களின் அன்பினால் வளர்ந்தேன். அவர்களுக்காக நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். நான் சாதாரணமாக இருக்கவே விரும்புகிறேன். இதுபோன்ற பட்டங்களால் மனதில் நெருக்கடிதான் ஏற்படுமே தவிர அதனால் வேறு எந்த பயனும் இல்லை. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

சாய் பல்லவியின் இந்த முடிவு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது .

Share.