நான் யாரோட ரசிகை தெரியுமா ? – சாய் பல்லவி

கஸ்தூரி மான் , தாம் தூம் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் நடிகை சாய் பல்லவி. அதன் பிறகு பிரேமம் என்கிற மலையாள படம் மூலம் நாயகியாக அறிமுகமானார் . தமிழ் , தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சாய் பல்லவிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது . நேரடி தமிழ் திரைப்படம் நடிப்பதற்கு முன்பே தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் . பிரேமம் படத்திற்கு பிறகு களி என்கிற படத்தில் நடித்தார் அதன் பிடா என்கிற தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார் . தமிழில் தியா என்கிற படத்தில் நடித்தார் , நடிகர் தனுஷுடன் இணைந்து மாறி 2 , சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார் .

நீண்ட இடைவேளைக்கு பிறகு சாய் பல்லவி தற்போது தமிழ் படத்தில் நடித்துள்ளார் . அந்த படத்தின் பெயர் கார்கி . கவுதம் இராமச்சந்திரன் இந்த படத்தை இயக்கி உள்ளார் . நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் இந்த படத்தை சக்தி பிலிம் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டது .திரையரங்கில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படம் வெளியான பின்பு சாய் பல்லவி பாராட்டு மழையில் நினைந்தார்.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி பேட்டி ஒன்றில் தனக்கு மிகவும் பிடித்த ஹீரோ நடிகர் சூர்யா என்று தெரிவித்துள்ளார் .எனக்கு நிறைய நடிகர்களை பிடிக்கும் அதில் சூர்யா தான் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று தெரிவித்துள்ளார் .

Share.