சாய் பல்லவியின் ‘கார்கி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் சிவகார்த்திகேயனின் புதிய படம் மற்றும் ‘கார்கி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘கார்கி’ படத்தை இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார்.

இந்த படம் இன்று (ஜூலை 15-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இதில் மிக முக்கிய ரோல்களில் காளி வெங்கட், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஆர்.எஸ்.சிவாஜி, ஜெயப்பிரகாஷ், பிரதாப், லிவிங்க்ஸ்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார்.

‘Blacky Genie & My Left Foot புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா தனது ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மூலம் ரிலீஸ் செய்துள்ளார்.

தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.