போட்டோஷூட் எடுக்கையில் யானையை பார்த்து பயந்து ஓடிய சாக்ஷி… வைரலாகும் வீடியோ!

‘கொரோனா’ நோயின் இரண்டாவது அலை தாக்கம் அதிகமானதால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. கடந்த ஜூன் 20-ஆம் தேதி சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது.

அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ். ஆனால், கடந்த சில நாட்களாக லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருந்தது. ஆகையால், அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றினார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டார்கள். ‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான நடிகை சாக்ஷி அகர்வால்.

Sakshi's Photoshoot Video With Elephant1

இப்போது சாக்ஷி அகர்வால் நடிப்பில் ‘சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், அரண்மனை 3, புரவி, நான் கடவுள் இல்லை, தி நைட்’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யானை அருகில் நின்று போட்டோஷூட் எடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் யானை தலையாட்டியதை பார்த்து பயந்து ஓடுகிறார் சாக்ஷி அகர்வால்.

Share.